தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2022, 6:54 AM IST

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 7 - இன்றைய ராசிபலன்

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ( ஜூலை 7) ராசி பலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

மேஷம் :சந்தோஷமான செய்தியின் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த செய்தி தனிப்பட்ட வகையில் இருக்கலாம் அல்லது உங்கள் தொழில் அல்லது பணி தொடர்பான செய்தியாக இருக்கலாம் அல்லது நிதி ஆதாயமாக இருக்கலாம். உங்கள் பெயர் திறனுக்கு ஏற்ற வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம் :நீங்கள் இன்று சிறந்த முறையில், ஈடுபாட்டுடன் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதனால் பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் கலை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. நீங்கள் இன்று சிறந்த வகையில், நிபுணர் தன்மையுடன் செயல்பட்டு, உங்களுக்கு இட்ட பணிகளை நிறைவேற்ற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம் :இன்றைய தினத்தில், வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

கடகம் :உங்கள் காதல் துணையுடன், கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் அதிக பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் அவர்களுக்காக அதிக பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டு உள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில், பரிசுகளை தருவார்கள்.

சிம்மம் :இன்றைய தினத்தைப் பொருத்தவரை, விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அது குறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கன்னி :உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்கள் அறிவாற்றலும் அனைவரையும் அனுசரித்துச் செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தவும்.

துலாம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல. அது குறித்து நீங்கள் மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம் :உங்களது அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற் கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு :இன்று, வாடிக்கையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கவனமாகக் கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான சாதகமான நாளாக இருக்கும்.

மகரம் :இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உங்களது உலகம் ஆகும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.

கும்பம் :இன்றைய தினத்தை, உங்களுக்காகச் செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும் நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம் தான் உங்களுக்குத் தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மீனம் :இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவைக் கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:Weekly Horoscope: ஜூலை முதல் வாரத்திற்கான ராசி பலன்!

ABOUT THE AUTHOR

...view details