மேஷம்:நீங்கள், உணர்ச்சிவசப்படுவதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும்.தோல்விகளால் சோர்வு அடைவீர்கள்.உங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைதல் நன்மை பயக்கும்.
ரிஷபம்:நீங்கள் அனைத்து விஷயங்களிலும் மரபுகளைக் கடந்து புதுமையாகச் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயரதிகாரிகளிடம் பணிந்து செல்ல நேரிடலாம்.ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும்.மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.
மிதுனம்:இன்று, நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமைகளை மனதில் கொண்டு கவனித்துச் செயல்படுதல் நன்மை பயக்கும். அத்துடன் எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் கையாளுதல் அவசியம். இன்று சாதாரண விஷயங்களுக்கு கூட கவலை கொள்வீர்கள்.நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாகக் கவலைப் பட வாய்ப்பு உள்ளது.நீங்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவது தவிர்க்கவும், உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.
கடகம்:இன்று,உங்களுக்கு ஒரு மங்களகரமான நாளாக அமையலாம்.உங்களின் பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப்பொழுதை உங்களின் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம் உங்கள் மனதில் பாரம் குறைய வாய்ப்பு உள்ளது.
சிம்மம்:இன்று,நீங்கள் கவனமாகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க விரும்புவீர்கள்.உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமையலாம்.உங்கள் வேலையில் உறுதியாகவும்,குறிக்கோளுடனும் இருப்பீர்கள்.எனினும் நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். மேலும் சிறு பயணத்தை மேற்கொள்ளலாம்.
கன்னி:இன்று,உங்களின் கவனம் அதிகரிக்கலாம்.உங்கள் வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயலலாம். மனதிற்கு நெருக்கமான அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.