தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 11 - இன்றைய ராசி பலன்

வாசகர்களே... மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய (ஜூலை 11) ராசிபலன்களை இங்கு காணலாம்.

ஜூலை-11: இன்றைய ராசிபலன்கள்
ஜூலை-11: இன்றைய ராசிபலன்கள்

By

Published : Jul 11, 2022, 7:02 AM IST

மேஷம்:எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால், கவனித்து சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவுகள், நீண்டகாலமாக கடும் உழைப்பினால் ஏற்பட்ட முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். இன்றைய காலை பதற்றத்துடன் தொடங்கினாலும், மாலையில் குழந்தைகளுடன், நேரத்தைக் கழித்து அவர்களது வீட்டு பாடத்தில் உதவி செய்வீர்கள்.

ரிஷபம்:இன்று, உங்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்துவந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனை கருத்தில் கொண்டு, அவரை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. அமைதியாக செயல்படவும். உங்களது வளமையான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும்.

மிதுனம்:இன்றைய தினத்தில், மேலதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில், இன்றைய உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற வெற்றியை கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.

கடகம்:இன்றைய பொழுது, உற்சாகத்துடன் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது உற்சாகம் மற்றும் ஆர்வத்தை, யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் செல்லும் இடத்திலும், மக்களை சந்தோஷம் அடையச் செய்வீர்கள். எனினும், மனதை பாதிக்கக் கூடிய வகையிலானசெய்தி வரும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: பணியிடத்தில் பதவி உயர்வை அடைய, உங்கள் வேலையின் மீது , நீங்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் வேலைகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

கன்னி: உங்களது குறிக்கோள்கள் மற்றும் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கான உங்களது ஆர்வம் ஆகியவை இன்று அதிகம் இருக்கும். இன்றைய கடும் உழைப்பிற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற, தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

துலாம்: உறுதியான மன நிலையுடன் கடுமையான முடிவுகள் எடுக்கும் என்று உங்கள் இயல்பின் காரணமாக, சிறந்த வகையில் பலனடைவீர்கள். உயரதிகாரிகள் உங்களது திறமை மற்றும் செயலாற்றலை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிக்க பதவி உயர்வு தரும் வாய்ப்பும் உள்ளது.

விருச்சிகம்: உணர்வுகளை வெளிப்படுத்தும் மன நிலையில் இருபீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன், உங்கள் மனதில் இருப்பவற்றை பகிர்ந்து கூடாதா என்ன? நிச்சயமாக பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு வரவேற்கத்தக்க தன்மையாகும். உங்கள் இதயத்தில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும், பொது இடத்தில் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது.

தனுசு: இன்று நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு இருக்கக்கூடும். ஒரே விதமான பணிகளினால் உற்சாகம் இல்லாமல் இருக்கும். கிரக நிலைகளும் மந்தமாக இருப்பதால், இன்று நீங்கள் குதூகலிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் பொறுமையாக இருந்து, நாளை சிறந்த வகையில் துவங்கும் என்று நம்பிக்கை வைக்கவும்.

மகரம்: உங்களது அபரிதமான பேச்சாற்றல் காரணமாக, உங்களை சுற்றி இருப்பவர்களை, நீங்கள் அமைதி படுத்துவீர்கள். எனினும் நீங்கள் இந்த திறமையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. பிரச்சனைகளின் ஆணி வேர் வரை சென்று ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.

கும்பம்: நிதி நிலைமை மற்றும் வருமானம் தொடர்பான எண்ணங்கள் அல்லது கவலைகள், உங்கள் மனதில் இன்று முழுவதும் இருக்கும். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை, நீங்கள் ஒதுக்கியதில்லை என்றாலும், இன்று நண்பர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் முற்றிலுமான உணரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மீனம்: உங்களது மனதில் உள்ளவற்றை, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களது சிறந்த தொடர்பு திறன் காரணமாக, அறிவார்ந்த மக்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள். சிறந்த கல்வியாளர்கள் மற்றும் முன்னேற்றமடைந்த மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இது பணியில் நீங்கள் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க:WEEKLY HOROSCOPE: ஜூலை 2வது வாரத்திற்கான ராசிபலன்...

ABOUT THE AUTHOR

...view details