மேஷம்
உங்களது தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இன்று நீங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.
ரிஷபம்
இன்று நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்னைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
மிதுனம்
இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் உங்களது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். அவர்களும் தங்கள் உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். பரஸ்பரம் திருப்தியான உணர்வு ஏற்படும். இன்றைய தினத்தில், வேடிக்கையும் குதூகலமும் இருக்கும்.
கடகம்
பணியிடத்தில், சிறந்த கூட்டாளி உறவை ஏற்படுத்தும் உங்களது திறமையின் காரணமாக, முக்கிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது கவனமாக செயல்படுவது முக்கியம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனையே முழுமையாக படித்து அறிந்து கொள்வது நல்லது.
சிம்மம்
பழைய நண்பர்களுடன் உள்ள தொடர்பை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும். இது சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக் கூடும். அதனால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி
இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள் மற்றும் பொழுதுபோக்கு இருக்கும். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.