ராஜஸ்தான்:மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வரப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஜோத்பூர் வந்தடைந்த விமானத்தை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர், ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்தும் தங்கத்தை மீட்க முடியவில்லை.
ஆனால், இருவரிடமிருந்தும் கிடைத்த ஆதார் அட்டைகள் போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விமான நிலைய காவல் நிலையத்தில் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர். மோசடி வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிங்கப்பூரைச் சேர்ந்த கம்ரான் மகன் அப்துல் கனி ரேடியோவாலா (51), மும்பையைச் சேர்ந்த நூர் முகமது மகன் முகமது ரபிக் லக்டவாலா ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிங்கப்பூரிலிருந்து பல முறை இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மும்பை விமான நிலையத்தில் கண்டிப்பு அதிகமாக இருப்பதால் அவர்கள் தங்கத்தை விமானத்தின் சீட்டில் மறைத்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வருவார்கள்.