தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு அரசு நீட்டிய உதவிக்கரம்!

கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், தற்போது இந்தியாவிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும்பட்சத்தில், தங்களின் OIA-II பிரிவைத் தொடர் கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு அரசு நீட்டிய உதவிக்கரம்
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு அரசு நீட்டிய உதவிக்கரம்

By

Published : Jun 6, 2021, 6:19 AM IST

டெல்லி: இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அவரது ட்விட்டர் பக்கத்தில், "வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் சிக்கிக்கொண்டவர்கள், தங்களின் பிரச்சினைகள் குறித்து OIA-II Division-ஐ தொடர்புகொள்ளவும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புகொள்ள மின்னஞ்சல்

மேலும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருக்க நேரிட்டவர்களும், போக்குவரத்து சார்ந்து பிற பிரச்சினைகள் உடையவர்களும், தங்களின் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை OIA-II பிரிவின் மின்னஞ்சல்களான us.oia2@mea.gov.in, so1oia2@mea.gov.in இவற்றில் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், எல்லை அடைப்பு போன்றவற்றின் காரணமாக சர்வதேச மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். இதன் பின்னணியில்தான் இந்த அறிவிப்பை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மீண்டும் தடுப்பூசியா?

கோவாக்சின் அல்லது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய மாணவர்களை பல சர்வதேச நிறுவனங்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் இனி எத்தனாலுக்கு அதிக முக்கியத்துவம் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details