புதுச்சேரி:அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், கலைநேசன். தமிழ்நாடு பகுதியான மரக்காணத்திலிருந்து மூட்டைகளில் நாட்டு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு, புதுச்சேரி நோக்கி தன் 7 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்திலிருந்த பட்டாசுகள் வெடித்து, தூக்கிவீசப்பட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அருகிலிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.
இந்தச்சம்பவத்தின் போது, எதிரில் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் இருவர் காயமடைந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டுப் பட்டாசு வெடித்து விபத்து இதனால் புதுச்சேரிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த இருவர் உடலையும் மீட்டனர். பட்டாசு வெடித்ததில் லாரி உட்பட பல வாகனங்கள் சேதமடைந்ததால், பட்டாசு மூட்டைக்குள் நாட்டு வெடிகுண்டு இருந்ததா என்பது குறித்து விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காவல் துறையினர் தடவியல் துறையினர் உதவியோடும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது - ஏன் தெரியுமா?