ஹெல்மெட்டுக்குள் பதுக்கியிருந்த ராஜநாகம் திருச்சூர்: பொதுவாக அடர்ந்த செடி கொடி பகுதிகளில், ஊர்வனங்கள் அதிகளவில் நிறைந்திருக்கும். ஊர் வழக்கங்களில் பெரியோர்கள் சொல்லும், பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழிக்கேற்ப கேரள மாநிலம் திருச்சூரில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தலைக் கவசம், உயிர்க் கவசம் என்பார்கள். ஆனால், தற்போது ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான கவசமாக மாறியுள்ளது.
திருச்சூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பொண்டேகல் சோஜன். இவர் தினமும் அவரது இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்வது வழக்கம். பாதுகாப்பைக் கருதி சோஜன் எப்போதும் ஹெமெமட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், வழக்கம் போல் இன்றும் வேலைக்குச் செல்வதற்காக, ஹெல்மெட் அணிந்து கொண்டு, அவரது இரு சக்கர வாகனத்தில், அவர் வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது மாலை 4 மணியளவில், வேலை முடிந்து அவரது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பவிருந்த நிலையில், சோஜன் தனது ஹெல்மெட்டில் ஏதோ ஊர்ந்து செல்வதைக் கவனித்துள்ளார்.
பின்னர், ஹெல்மெட்டுக்குள் பாம்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதிர்ஷ்டத்தில் உயிர் தப்பிய சோஜன், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இது குறித்து சோஜன் வனத்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். கேரள வனத்துறை பாம்பு பிடி தன்னார்வலரான லிஜோ, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோஜிவின் ஹெல்மட்டை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், பாம்பு இருப்பதை லிஜோவும் உறுதிசெய்தார். மேலும் சோஜோவின் ஹெல்மெட்டுக்குள், வீரியம் நிறைந்த, 2 மாதமே ஆன ராஜ நாகம் இருந்தது தெரிய வந்தது.
ராஜ நாகம் சோஜோவின் ஹெல்மெட்டுக்குள் எப்படி போனது என்ற பல்வேறு கேள்விகள் எழும்பின. அப்போது சோஜோ அவரது இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் அவரது ஹெல்மட்டை தவறுதலாகக் கீழே விட்டுச் சென்றுள்ளார். இதன்மூலமாக ராஜ நாகம் ஹெல்மெட்டிற்குள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தக்க சமயத்தில் ஹெல்மெட்டுக்குள் பாம்பு இருப்பதை சுதாரித்தானால் எந்த ஆபத்துமின்றி உயிர் பிழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹெல்மெட்டில் இருந்து பாம்பை மீட்கும் போது, இப்படி இக்கட்டான சூழலில் சிக்கும்போது, அவற்றிடம் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் ஒருமுறைக்கு இருமுறை மிகுந்த கவனத்துடன் நாம் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க:நிலாவிற்கு சுற்றுலா..! இஸ்ரோவின் திட்டங்கள் ஏராளம்..! இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்!