புதுச்சேரியில் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகிறது.
அதன்படி கடந்த 1ஆம் தேதி வெளியான அறிவிப்பில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. இன்றுமுதல் (ஆகஸ்ட் 6) திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன.