தமிழ்நாடு

tamil nadu

வலுக்கட்டாயமாக தடுப்பூசி; 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வலுகட்டாயமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதால் 150 குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

By

Published : Oct 1, 2022, 7:33 PM IST

Published : Oct 1, 2022, 7:33 PM IST

குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தடுப்பூசி போட்ட பள்ளி; 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தடுப்பூசி போட்ட பள்ளி; 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பெற்றோர்களிடையே அனுமதி பெறாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்

இதுகுறித்து பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் ராம் அவதார் யாதவ் கூறுகையில், “அலிகார் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 150 குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசாருடன் விரைந்து அவர்களை உடனடியாக சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். இதில் சம்பந்தப்பட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சுகாதார நிலைய மருத்துவர் அவனேந்திர யாதவ் கூறுகையில், "குழந்தைகளுக்கு TD மற்றும் DPD எனப்படும் தடுப்பூசி போடப்பபட்டுள்ளது. DPD தடுப்பூசி போடப்பட்ட பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது வழக்கம். அவர்களுக்காண சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் - பொதுமக்களுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details