தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 24, 2021, 9:32 PM IST

ETV Bharat / bharat

கடத்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கொலை!

ராய்ப்பூர்: மூன்று நாள்களுக்கு முன்பு கடத்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை நக்சலைட்டுகள் கொன்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Chhattisgarh: Naxals kill policeman after abducting him
NaxalChhattisgarh: Naxals kill policeman after abducting him

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளதால், அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி பல்நாரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற முர்லி தாதி என்ற காவல் உதவி ஆய்வாளரை நக்சலைட்டுகள் கடத்தியதாக பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் கம்லோகன் காஷ்யப் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை மீட்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அவர் கடத்தப்பட்டு மூன்று நாள்கள் ஆகியுள்ள நிலையில், கங்லுரில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலத்தின் அருகே, 'மக்கள் நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது' என எழுதப்பட்டிருந்தது.

இந்த மாத தொடக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா-பிஜாப்பூர் மாவட்டத்திற்கு இடையிலான வனப் பகுதியில் நடந்த நக்சல் தாக்குதலில் குறைந்தபட்சமாக 22 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details