மாநில அரசுகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”பல்வேறு மாநில அரசுகளுக்கு இதுவரை 21 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 19 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளில் கையிருப்பில் உள்ளன.
மேலும், அடுத்த மூன்று நாள்களில் சுமார் 26 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும். கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கியப் பங்காற்றுவதால், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம், மே மாதத்தில் தொடங்கப்பட்டது.