தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் மூன்று நியமன எம்எல்ஏக்கள் - மத்திய அரசு உத்தரவு

By

Published : May 10, 2021, 9:07 PM IST

Updated : May 11, 2021, 7:03 AM IST

central government order in puducherry  புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்  பாஜக நியமன எம்எல்ஏக்கள்  மத்திய உள்துறை அமைச்சகம்  Federal Ministry of Home Affairs  BJP nominated MLAs  MLAs were nominated in Puducherry
central government order in puducherry

21:00 May 10

புதுச்சேரி: புதிதாக மூன்று பாஜக எம்.எல்.ஏக்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக 6 இடங்களிலும், என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. அங்கு ரங்கசாமி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

துணை முதலமைச்சர், அமைச்சர்கள் வரும் 14ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், புதுச்சேரிக்கான மூன்று நியமன எம்எல்ஏ பதவி, கூட்டணிக் கட்சி சார்பில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த மூன்று எம்எல்ஏக்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், பாஜகவைச் சேர்ந்த அசோக்பாபு, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வெங்கடேசன் ஆகியோர் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:திருப்பதியில் ஆக்ஸிஜன் சிலிண்டரில் பழுது: 11 பேர் உயிரிழப்பு!

Last Updated : May 11, 2021, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details