தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...

கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. சுமார் 29 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்த வழக்கு கடந்த வந்த பாதையை சுருக்கமாகக் காணலாம்.

By

Published : Dec 22, 2020, 10:38 AM IST

CBI Special Court to deliver the verdict in Sister Abhaya murder case today
CBI Special Court to deliver the verdict in Sister Abhaya murder case today

திருவனந்தபுரம்:கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு கான்வென்ட்டில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டு 28 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களுக்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பை வழங்கவுள்ளது.

திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே. சனல் குமார் கொலை நடந்ததிலிருந்து இன்றுவரை நடந்த பல வியக்கத்தக்க திருப்பங்களை ஆராய்ந்து, இன்று தனது தீர்ப்பை அளிக்கவுள்ளார்.

வழக்கு கடந்துவந்த பாதை இதோ...

1992 மார்ச் 27:கோட்டாயத்தில் உள்ள செயின்ட் பியூஸ் கான்வென்ட் கிணற்றில் கன்னியாஸ்திரி அபயாவின் சடலம் மர்மமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது

1992 ஏப்ரல் 14: 17 நாட்கள் விசாரணைக்கு பின்னர் உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு ஒப்படைத்தது

1993 ஜனவரி 30: கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க கோட்டயம் ஆர்.டி.ஓ நீதிமன்றத்தில் குற்றப்பிரிவினர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

1993 மார்ச் 29:கேரள உயர்நீதிமன்றம் அபயா கவுன்சில் என்ற பெயரில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்குமாறு அறிவுறுத்தியது.

1996 டிசம்பர் 6:இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது

1997 மார்ச் 20: இந்த வழக்கில் மேலும் அதிகப்படியான விசாரணைக்கு உத்தரவிட்டு எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது

1999 ஜூலை 12:அபயாவின் மரணம் ஒரு கொலை, தற்கொலை அல்ல என்று சிபிஐ முடிவு செய்தது

2000 ஜூன் 23: அபயா வழக்கை புதிய விசாரணைக் குழுவுடன் மறு விசாரணை செய்ய எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது

2005 ஆகஸ்ட் 30: மூன்றாவது முறையாக இந்த வழக்கை முடிக்கக் கோரி எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது

2007 மே 22:இந்த வழக்கின் தடயவியல் அறிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திருவனந்தபுரம் தலைமை நீதித்துறை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது

2008 செப்டம்பர் 4: இந்த வழக்கு டெல்லி சிபிஐ பிரிவில் இருந்து கொச்சி சிபிஐ பிரிவுக்கு மாற்றப்பட்டது.

2008 நவம்பர் 18: அபயா இறந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை சிபிஐ கைது செய்தது

2009 ஜூலை 17:சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமாரன் நாயர், எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்

2011 மார்ச் 16: குற்றம் சாட்டப்பட்டவர்கள் எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை சமர்ப்பித்தனர்

2015 ஜூன் 30:ஆரம்ப காலகட்டத்தில் அபயா வழக்கை விசாரித்த முன்னாள் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கே. சாமுவேல் குற்றம் சாட்டப்பட்டவர் என பட்டியலிடப்பட்டு திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2018 ஜனவரி 22: அபயா வழக்கில் ஆதாரங்களை அழித்தாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கே.டி.மைக்கேல் நான்காவது குற்றவாளியாக பட்டியலிடப்பட்டார்.

2018 மார்ச் 7:முதல் மற்றும் மூன்றாவது குற்றவாளிகளின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்தது, இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

2019 ஆகஸ்ட் 5: திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றப்பத்திரிகையை வாசித்தார்

2019 ஆகஸ்ட் 26: அபயா வழக்கு விசாரணை திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அவர் இறந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது

2020 டிசம்பர் 10: அபயா கொலை வழக்கில் விசாரணை முடிந்தது

2020 டிசம்பர் 22:அபயாவின் மர்மமான மரணத்திற்கு 28 ஆண்டுகளுக்கு பின்னர் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கவுள்ளது

இதையும் படிங்க: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் முலக்கலின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

ABOUT THE AUTHOR

...view details