தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உடல் எடையை பழங்கள் அதிகரிக்குமா? - diet tips

இன்றைய நாள்களில் பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைப்பதற்காக கலோரி குறைவான உணவை தேர்ந்தெடுக்கின்றனர். அதில் முதலில் உணவில்தான் கலோரி அதிகமாக இருக்கின்றது என எண்ணி, உணவு உண்பதைத் தவிர்த்து, பழங்களை தேர்ந்தெடுக்கின்றனர். பழங்களில் கலோரிஃபிக் மதிப்புகள் குறைவாக இருப்பதாக நினைத்து நிறைய பழங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் சில பழங்கள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது, இந்த பழங்கள் எது என்பதை பார்ப்போம்.

உடல் எடையை கூட்டும் பழங்கள்

By

Published : Mar 1, 2021, 6:31 PM IST

Updated : Mar 1, 2021, 9:45 PM IST

ஒருவர் உடல் எடையைக் குறைக்க உணவைத் திட்டமிடத் தொடங்கியவுடன், அவர்களின் உணவு அட்டவணையில் முதலில் இடம்பிடித்திருப்பது பழங்கள்தான். பழங்கள் ஆரோக்கியமான, முழு உயிர்ச்சத்துக்களும் அடங்கி இருப்பதால் நம் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

உடல் எடையை கூட்டும் பழங்கள்

எனினும், அனைத்துப் பழங்களும் எடை குறைப்புக்கு உதவுவதில்லை. சில பழங்களில் அதிகப்படியான கலோரிகளும், மாவுச்சத்தும் நிறைய உள்ளன. அவை உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். எனவே, உடல் எடையை குறைப்பதில் பழங்களின் பட்டியலை தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம். அவற்றில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில பழங்களின் கலோரி பட்டியல்.

வாழைப்பழம்

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிகளவு கலோரி இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக அளிக்கவல்லது. இதில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, இது அதிக மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) அடங்கியுள்ள பழமாகும். அதனால்தான் சில விளையாட்டு வீரர்கள் தங்கள் போட்டிகளுக்கு இடையில் வாழைப்பழம் சாப்பிடுவதுண்டு. காலை உணவில் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு வாழைப்பழமும் சாப்பிடுவது நாள் முழுவதும் ஆற்றலை அளிக்கிறது. ஏனேனில் இரண்டிலும் அதிக கலோரிகள் (கார்போஹைட்ரேட்) நிறைந்துள்ளது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 150 கலோரிகள் உள்ளன (60 சதவீதம் கார்போஹைட்ரேட்). அதாவது 37.5 கிராம் கார்போஹைட்ரேட் ஆகும். எனவே, ஒரு நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழைப்பழங்களை உட்கொண்டால் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

திராட்சை

திராட்சை:

திராட்சையில் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்புச்சத்து இரண்டும் அதிகளவு இருப்பதால் உடல் எடை கூடும் வாய்ப்பு அதிகம். 100 கிராம் திராட்சையில் 67 கலோரியும், 16 கிராம் கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கிறது. தினமும் இதை உட்கொள்ளும்போது எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உட்கொள்ளவதைத் தவிர்க்கவேண்டும்.

மாம்பழம்

மாம்பழம்:

மாம்பழத்திலும் அதிகளவு கலோரி நிறைந்திருக்கிறது. உதாரணமாக ஒரு கப் மாம்பழத்தில் 99 கலோரி அடங்கியுள்ளது. ஒரு மாம்பழத்தில் 25 கிராம் கார்போஹைட்ரேட்டும், 23 கிராம் இயற்கை இனிப்பும், 3 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அளவோடு உண்டால் அளவான ஆற்றல் கிடைப்பதோடு, எடை குறைய வழிவகை செய்கிறது.

அவகேடோ

அவகேடோ:

அதிகளவு கலோரி நிறைந்த பழமாகும்.100 கிராம் அவகேடோவில் 160 கிராம் கலோரி நிறைந்திருக்கிறது. இதில் நல்ல கொழுப்பு (healthy fat) அடங்கியுள்ளது. எனவே அளவோடு இதை உண்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

சப்போட்டா

சப்போட்டா:

இது அதிக ஆற்றல் நிறைந்திருக்கின்ற பழமாகும். மேலும் அதிகளவு கார்போஹைட்ரேட் (சர்க்கரை) இருப்பதால் இதையும் அளவோடு உண்பது நன்மை பயக்கும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்:

அன்னாசிப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கின்றது. ஆனால், மிக அதிகளவு கலோரியும் நிறைந்திருக்கின்றது. இதை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதால் எடை கூடும்.

உலர் திராட்சை

உலர் பழங்கள்:

உலர் பழங்களில் குறிப்பாக உலர் திராட்சை, அத்திப்பழம், பேரீச்சம் பழம் ஆகிய பழங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட்டும், நன்மை தரும் கொழுப்புகளும் நிறைந்திருக்கிறது. எனினும் கலோரி அதிகமாக இருப்பதால் உடல் எடை கூடும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

எனவே இப்பழங்கள் அனைத்தையும் அளவோடு உண்டால் உடல் எடை கூடுவதைத் தவிர்த்து அழகாகவும், உடல் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

இயற்கை நமக்கு அளித்துள்ள உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ள காய்கறிகள், பழங்களை உடல் தேவையை அறிந்து அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Last Updated : Mar 1, 2021, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details