தமிழ்நாடு

tamil nadu

அந்தரத்தில் பழுதான கேபிள் கார்... உயிருக்கு போராடிய 13 சுற்றுலா பயணிகள் மீட்பு!

By

Published : Jul 27, 2023, 10:25 PM IST

சுற்றுலா கேபிள் கார் நடுவழியில் பழுதாகி நின்றதால் ஏறத்தாழ 13 சுற்றுலா பயணிகள் நடுவழியில் சிக்கிக் கொண்டனர். ஏறத்தாழ 1 மணி நேர போராட்டத்திற்கு பின் கேபிள் காரில் இருந்து 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 5 சிறுவர்கள் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Cable Car
Cable Car

நைனிடால் :உத்தரகாண்டில் சுற்றுலா கேபிள் கார் நடுவழியில் பழுதாகியதால் அந்தரத்தில் தொங்கிய 13 சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் கேபிள் கார் சாகசம் மிகவும் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டு உத்தரகாண்ட் சுற்றுலா வரும் உள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் இமயமலையை இணைக்கும் இந்த கேபிள் காரில் ஒரு ரவுண்ட் செல்வதை முக்கிய கடைமையாக கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுடன் ஒரு மருங்கில் இருந்து புறப்பட்ட கேபிள் கார் திடீரென நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் கேபிள் டிராலியில் இருந்த சுற்றுலா பயணிகள் பீதிக்குள்ளாகினர். இயல்பு நிலைக்கு கேபிள் காரை கொண்டு வர ஊழியர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒருவர் பின் ஒருவராக சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். இந்த கேபிள் காரில் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 5 பள்ளிக்கூட குழந்தைகள் உள்பட 13 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒருவர் பின் ஒருவாரக அனைவரும் எவ்வித சேதமுமின்றி மீட்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கேபிள் கார் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பழுது நீக்கப்படும் வரை அடுத்த கட்ட கேபிள் கார் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :Opposition next meeting : ஆகஸ்ட் 25, 26ல் எதிர்க்கட்சிகள் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம்.. தகவல்!

ABOUT THE AUTHOR

...view details