மும்பை:ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சந்தா கோச்சர், 2019ஆம் ஆண்டில் தன் அதிகார வரம்பை மீறி வீடியோகான் நிறுவனத்திற்கு 3ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளார். கடனில் பெரும் தொகை கமிஷனாக சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2009 முதல் 2011 வரையில் வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கியின் கடன் கொள்கைகளை மீறி ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டதாகவும், 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடன் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்தி சந்தா கோச்சரை, ஐசிஐசிஐ வங்கிப் பணி நீக்கம் செய்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், தீபக் கோச்சர், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோருக்குச் சொந்தமான நியூ பவர் ரினிவபில்ஸ், சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சொத்துகளை சிபிஐ முடக்கியது.