புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் 14ம், எதிர்க்கட்சிகளுக்கு 14 எம்.எல்.ஏக்களும் சமநிலையில் உள்ள நிலையில் நேற்று மெஜாரிட்டியை நிரூபிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் செயலரிடம் எதிர்க்கட்சியினர் கடிதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று(பிப்.18) என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சாமிநாதன், அதிமுக செயலாளர் அன்பழகன் ஆகியோர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ராஜ்நிவாஸில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பையடுத்து, பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று கொடுத்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அதற்கு சட்ட நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், ஆளும் காங்கிரஸுக்கு 13 எம்.எல்ஏ.க்கள் தான் உள்ளனர். எங்களுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் பாஜக கூட்டணிக் கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்
இதையும் படிங்க: சர்வதேச விமான போக்குவரத்திற்கு புதிய வழிகாட்டுதல்கள்!