தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2019, 5:25 PM IST

ETV Bharat / bharat

“உணவுக்கு மதம் கிடையாது” - சொமேட்டோவின் பதிலடி

போபால்: ஆர்டர் செய்த உணவை முஸ்லீம் நபர் எடுத்துவருகிறார் என்பதை அறிந்து அதனை ரத்து செய்த நபருக்கு  ’சொமேட்டோ’ நிறுவனம் கொடுத்த பதிலடி  வரவேற்பைப் பெற்றுள்ளது.

“உணவுக்கு மதம் கிடையாது” - சொமேட்டோவின் பதிலடி

மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அமித் சுக்லா. இவர் நேற்று இரவு 'சொமேட்டோ' (ZOMATO) உணவு செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவு டெலிவரிக்காக சொமேட்டோ ஊழியரிடம் தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் முஸ்லீம் என்பதால் அந்த ஆர்டரை ஒரு இந்து டெலிவரி பாய் மூலம் அனுப்பவேண்டும் என உணவை ஆர்டர் செய்தவர் கோரியுள்ளார். ஆனால் சொமாட்டோ நிறுவனம் அவ்வாறு மாற்ற முடியாது என கூறியது. இதனால் அந்த நபர் ஆர்டரை ரத்து செய்து, அதற்குரிய தொகையான 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவு

பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். பணத்தையும் திரும்ப கொடுக்கமுடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இவரது ட்வீட்டுக்கு சொமேட்டோ நிறுவனம், 'உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று பதிலடி கொடுத்துள்ளது. சொமேட்டோவின் இந்த பதில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், இவரது பதிவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கிண்டல் செய்தும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details