மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள், வெள்ளத்தில் சிக்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் முடங்கியுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை மகாராஷ்டிராவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
'நிவாரண பொருட்களின் மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது'
மும்பை: வெள்ளத்தின்போது அளிக்கப்படும் நிவாரண பொருட்கள் மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை என பல நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டவருகிறது. ஆனால், அந்த பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படத்தைக் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அளிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"நிவாரண பொருட்கள் அரசால் அளிக்கப்படுகிறது. எனவே, யாரும் நிவாராண பொருட்களின் மேல் அரசியல் தலைவர்கள் புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது" என்றார்.