தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரும தொற்று சொரியாசிஸ்... தடுப்பது எப்படி!

சரும தொற்றான சொரியாசிஸின் அறிகுறிகள், வகைகள், சிகிச்சை முறைகள் குறிந்து இக்கட்டுரையில் அறிந்துக்கொள்வோம்.

so
so

By

Published : Nov 1, 2020, 6:09 PM IST

சொரியாசிஸ் என்பது சருமத்தின் செல் உற்பத்தியை அளவுக்கு அதிகமாக உருவாக்கும் ஒரு சருமத் தொற்று ஆகும். வழக்கமாக சில வாரங்களில் உற்பத்தியாக வேண்டிய சரும செல்களில் சில நாள்களிலேயே அதிகமாக உற்பத்தியாகி மேற்பரப்பில் குவிந்துவிடுவதால் விரைவாக உதிர்ந்தும் விடுகிறது.இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.சருமத்தில் உயர்த்தப்பட்ட பிளேக்குகள் மற்றும் செதில்கள் போன்ற அழற்சியின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த செல்கள் பாதிப்பு உடலில் பல பாகங்களிலும் எளிதாக காணமுடியும்.

இதன் பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடும். பெரும்பாலும் இளைஞர்களிடம் அதிகளவில் தென்படுகிறது. ஆரம்பத்திலே முறையான சிகிச்சை பெற்றால், இதன் பாதிப்பை எளிதாக சரிசெய்திட முடியும்.

நோய் பாதிப்பின் காரணங்கள்:

இந்த நோய் பாதிப்பானது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, மரபியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.சொரியாசிஸ் குடும்பத்தினரிடையே பயணிக்கிறது. ஆனால் உங்களுக்கு பரம்பரையாக இந்த நோயின் முன்கணிப்புகள் இருந்தாலும் கூட, உங்களுக்கு இந்த சரும நோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல. மனஅழுத்தம், நோய்த்தொற்று, காயங்கள், மருந்துகள் அல்லது வானிலை (குறிப்பாக அளவுக்கதிகமான குளிர் அல்லது வறண்ட காற்று) போன்ற பல்வேறு புறச்சூழல்கள் இந்நோயைத் தூண்டும் அல்லது மேலும் மோசமாக்கும். இதனால், தோல் செல்கள் மிக வேகமாக வளரும். வேகமாக வளர்ந்து வரும் செல்கள் தோலின் மேல் அடுக்குகளில் குவிந்து, மேற்பரப்பில் புண்கள் உருவாக வழிவகுக்கிறது.

சொரியாசிஸ் அறிகுறிகள்:

​சிகப்பு தடிப்புகள்

வெள்ளை செதில்கள்

வறண்ட அல்லது வெடித்த சருமம்

நமைச்சல்

மூட்டுகளில் விறைப்பு மற்றும் வீக்கம்

நகத்தில் மாற்றங்கள்

சிகப்பு புள்ளிகள்

சீழ் நிறைந்த கொப்புளங்கள்

சொரியாஸிஸ் வகைகள்:

உடலில் பல்வேறு பாகங்களில் அதன் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக பிறப்புறுப்பு, கைகள், கால்கள் மற்றும் நகங்கள், முகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணமுடியும். அதன் வகைகள் குறித்து பார்ப்போம்.

குட்டேட் சொரியாஸிஸ்: இந்த நோய் சுமார் 8 விழுக்காடு மக்களை பாதிக்கிறது. இது உடலில் சிறிய வட்ட அளவிலான தடிப்பை உருவாக்கும்.குட்டேட் சொரியாஸிஸ் பெரும்பாலும் கைகள், கால் பகுதியில் ஏற்பட்டாலும், உடலில் எந்த பகுதியை பாதிக்கும் தன்மை கொண்டது.

புஸ்டூவார் சொரியாஸிஸ்: இந்த நோயினால் சுமார் 3 விழுக்காடு மக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இதன் அறிகுறிகள் வீக்கம் அல்லது சிவப்பு கொப்புளங்கள் ஆகும்.

பிளேக் சொரியாஸிஸ்: இது மிகவும் பொதுவான வகை ஆகும். சுமார் 80 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் அறிகுறியானது வீக்கங்கள், நமைச்சல் மற்றும் தோலில் திட்டுகளாக பிளேக்குகள் தோன்றும். இந்த நோயின் தனிநபரின் தோல் வகையை பொறுத்து வெள்ளை, ஊதா நிறங்களில் தென்படும்.இது பெரும்பாலும் உச்சந்தலை, முழங்கால்கள், முழங்கைகள், தொப்புள் அல்லது முதுகில் காணமுடியும்.

இன்வர்ஸ் சொரியாசிஸ்:

இந்த நோயின் பாதிப்பு பெரும்பாலும் அடிவயிறு, மார்பகங்களின் கீழ், பிறப்புறுப்பு பகுதி அல்லது கால்களில் ஏற்படும்.இது கடுமையான அரிப்பு, வலி, வியர்வையை உண்டாக்கும். இப்பகுதியில் நாம் தவறுதலாக தேய்த்துவிட்டால் பாதிப்பு மோசமடையக்கூடும்.

எரித்ரோடெர்மிக் சொரியாஸிஸ்:

இந்த நோய் பாதிப்பு மிகவும் அரிதானது ஆகும். இது கிட்டத்தட்ட 2 விழுக்காடு மக்களை மட்டுமே பாதித்துள்ளது.இது பெரும்பாலும் முழு உடலையும் பாதிக்கிறது மட்டுமின்றி உயிருக்கு ஆபத்தானது ஆகும். இந்த நோயின் அறிகுறிகளானது அரிப்பு, வலி, இதய துடிப்பு, வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், நீரிழப்பு ஆகும். இந்த பாதிப்பை அறிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

சிகிச்சை முறை:

இந்த நோய் பாதிப்பை உடனடியாக தீர்க்க முடியாவிட்டாலும், அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். சிகிச்சையின் போது அறிகுறிகள் பொறுத்துதான் அடுத்தக்கட்ட சிகிச்சைகள் டாப்பிகல் கீரிம்ஸ், லைட் தெரஃபி, மருந்து, ஊசி ஆகியவற்றை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்

எனவே, ஆரம்பத்திலே நோயை கண்டறிவது பாதிப்பை குறைக்ககூடும்.மன அழுத்தம், ஆல்கஹால், உணவுகள், ஒவ்வாமை போன்றவையும் சொரியாசிஸ் நோய் பாதிப்பை அதிகரிக்கும். இதுகுறித்து அறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details