லடாக் பகுதியில் அமைந்துள்ள இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, போர்ப் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்களும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்திய-சீன எல்லை விவகாரம்: நாளை பேச்சுவார்த்தை? - சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல்
டெல்லி: இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக நாளை இருதரப்பு ஒருங்கிணைப்பு- ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நாளை இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக இருதரப்பு ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற கடைசிக் கூட்டத்தில், இந்தியாவும் சீனாவும் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவப் படைகளைப் பின்வாங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி, எல்லையில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடைமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டன.