தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2019, 4:13 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவை ஊட்டசத்து குறைபாடு இல்லா நாடாக மாற்ற வழிமுறை என்ன?

இந்தியா உலக அரங்கில் ஏன் இன்னும் ஊட்டச்சத்து குறைபாட்டில் பின் தங்கியுள்ளது. இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்ற,  ஒரு முழுமையான கொள்கையை வகுத்து அதை முறையாக அமல்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?  என்பது குறித்து கீழ் உள்ள தொகுப்பில் காணலாம்....

ஊட்டசத்து குறைபாடு

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) உடனான சமீபத்திய வருடாந்திர கூட்டத்தில், , 1990-களில் இருந்து இந்தியா தனது சொத்து விகிதத்தை பாதியாக குறைத்துவிட்டது என்று உலக வங்கி கூறியது. ஆனால் உண்மையில், பசியால் அழுகிறவர்களின் கூக்குரல் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. உலகளாவிய பசி குறியீட்டில் (ஜிஹெச்ஐ), கணக்கெடுக்கப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102ஆவது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் (94), பங்களாதேஷ் (88), நேபாளம் (73), மியான்மர் (69), இலங்கை (66) ஆகிய நாடுகள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன.

உலகளாவிய பசி குறியீட்டு பகுப்பாய்வு, இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை விகிதமே நாட்டின் பசி வேதனைகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது . இந்த பகுப்பாய்வு உண்மையாக இருந்தால், அதிக மக்கள் தொகை கொண்ட சீனா GHI-இல் 25ஆவது இடத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பு இல்லாமை ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னர் கூறியுள்ளது.

பரவலான காலநிலை மாற்றங்கள் மற்றும் உலக வெப்பநிலை அதிகரிப்பது, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் உணவு உற்பத்தியில் 50 சதவீதம் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் நிலையான வளர்ச்சிக்கான தடைகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வேளாண் விளைபொருட்களின் அதிகரிப்பு இல்லாததாலும், அதிகரித்து வரும் மக்கள் தேவைகளுக்கு ஏற்ப நிலங்கள் விகிதாசாரமாக பயிரிடப்படாததாலும் உணவுப் பாதுகாப்பின்மை எழுகிறது. இன்றும், கிராமப்புற மக்களில் 75 சதவீதமும், நகர்ப்புற மக்களில் 50 சதவீதமும் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக அரசாங்கத்தின் ரேஷன் முறையைச் சார்ந்துள்ளார்கள் . குழப்பமான விநியோக சங்கிலி அமைப்பு காரணமாக, பெரும்பான்மையான மக்களின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை வகுத்ததன் மூலம் மதிய உணவு மற்றும் ஐசிடிஎஸ் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்பட்டாலும், மாநில அரசுகள் மந்தமாக செயல்படுத்தப்படுவதைக் காட்டின. இதன் விளைவாக, பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. உணவு தானிய வழங்கல், சேமிப்பு மற்றும் மேலாண்மை அமைப்புகளில் ஓட்டைகள் இருப்பதால், நான்கில் மூன்று பங்கு உணவு தானியங்கள் சேதமடைந்து வருகின்றன.

இயற்கை பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் உணவு பாதுகாப்புக்கு சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. பருவம் தவறிய மழை, விளையும் பயிர்களை அழித்து, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. வறட்சி காரணமாக, பயிரிடக்கூடிய நிலத்தில் பாதியளவுக்கு கூட போதுமான நீர் கிடைக்கவில்லை. இதன் விளைவாக விவசாய நிலங்கள் தரிசாகி வருகின்றன. நில பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதால் , உணவு தானிய விளைபொருள்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றன. காலநிலை மாற்றமும், புவி வெப்பமடைதலும் இதேபோல் தொடர்ந்தால், எதிர்கால தலைமுறையினரின் வாழ்வாதாரம் எதிர்மறையாக பாதிக்கப்படும்.

பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பில் வறுமை அதிகரிப்பு குறித்து குறிப்பிடப்பட்டாலும், அதோடு ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றன . 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 50 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய GHI புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் குழந்தை இறப்பு வீதம் 20.8 சதவீதமாக உள்ளது. 37.9 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே முறையாக வளர்க்கப்படுகிறார்கள். இந்த புள்ளிவிவரம் நம் தேசத்தின் மோசமான நிலையைக் காட்டுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார வசதி இல்லாதது, காலரா, மலேரியா மற்றும் வைரஸ் தொற்று போன்ற நோய்கள் குழந்தைகளின் உயிரைப் பறிக்கின்றன. இதனால் உணவுப் பாதுகாப்பு எதிர்காலத்தில் பல கடுமையான சவால்களை எதிர்கொள்ளப் போகிறது. வேலைவாய்ப்பு மற்றும் உணவை வழங்க அரசாங்கங்கள் முன்முயற்சிகளை மேற்கொண்டாலும், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற பிரச்சினைகள் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கின்றன என்பது கசப்பான உண்மை.

முழுமைபெற்ற தாய் மற்றும் குழந்தை மேம்பாட்டுக் கொள்கைகள் மற்றும் திட்டங்களுடன், ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை சமாளிக்க முடியும். 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்ற, ஒரு முழுமையான கொள்கையை வகுத்து அதை முறையாக அமல்படுத்தவேண்டும் . கிடைக்கக்கூடிய வளங்களை நிலையான வளர்ச்சிக்கு திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும். விவசாய விளைபொருட்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கறுப்பு சந்தைப்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், விநியோகச் சங்கிலியை மேம்படுத்த முடியும். பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை வழங்குவதன் மூலமும், நீர்வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், சிறந்த முடிவுகளை அடைய முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலம், இயற்கை பேரழிவுகளைத் தடுக்கலாம். அப்போதுதான், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமான குடிமக்களாக மாற முடியும்.

ABOUT THE AUTHOR

...view details