குறைபாடுகளைக் கொண்ட ரேபிட் டெஸ்டிங் சோதனைக் கருவிகளை ஐ. சி. எம். ஆர் வழங்கியதாக, மேற்கு வங்கம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அம்மாநில சுகாதாரத் துறைக்கு புதிய சோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்த 78 ரேபிட் டெஸ்ட் சோதனை கருவிகளைக்கொண்டு, நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
முதல் கட்டமாக ஐ.சி.எம்.ஆரிடம் இருந்து பெற்ற ரேபிட் டெஸ்ட் கிட்களில் கோவிட் 19 சோதனையை மேற்கொண்டு வரும் எங்கள் முயற்சியில், 78 ரேபிட் சோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. 64 சோதனைகள் ஹவுராவிலும், 14 சோதனைகள் கொல்கத்தாவிலும் நடத்தப்பட்ட நிலையில், அதில் கொல்கத்தாவில் இருந்த இருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கரோனா தொற்றைக் கண்டறிய தாமதமானதற்கு ஐ.சி.எம்.ஆர் தந்த கோளாறான ரேபிட் டெஸ்ட் கிட்கள் தான், காரணமென மேற்கு வங்க சுகாதாரத் துறை குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரவை குழு: கவலை தெரிவித்த மம்தா