நாட்டில் பயங்கரவாதிகள் ஊருடுவல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ட்ரோன் மூலமாக ஆயுதங்கள் சப்ளை செய்வது போன்ற வித்தியாசமான முறையையும் பயங்கரவாதிகள் கையாளுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாதிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அல்- கய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட ஷமிம் அன்சாரியை முர்ஷிதாபாத்தில் ஜலங்கி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இவர் கேரளாவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரையும் சேர்த்து முர்ஷிதாபாத்தில் இதுவரை ஏழு பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்துள்ளனர்
முன்னதாக, செப்டம்பர் 19ஆம் தேதியில், கேரளத்தின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்திய சோதனையில், 9 அல்-கய்தா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்து தெரியவந்துள்ளது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் திரட்டுவது மற்றும் டெல்லியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெரும்பாலானோர் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் சமுக வலைத்தளம் பக்கங்கள் மூலமாக பயங்கரவாதிகளாக மாறு நாச வேலையில் ஈடுபடுவதாக என்ஐஏ அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விரைவில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸ் காவலில் எடுப்பதற்காக கேரளா மற்றும் மேற்கு வங்கத்தின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.