கரோனா வைரஸ் பரவும் விதம், அதன் அறிகுறிகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றை, வரும் கல்வியாண்டில் (2021) மேற்கு வங்க பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில பாடத்திட்டக் குழு தலைவர் அவீக் மஜும்தீர், “பாடத்திட்டத்தில் கரோனா குறித்த தரவுகளை இணைப்பதற்காக பாடத்திட்டக் குழு உறுப்பினர்களிடமும், கல்வி ஆலோசகர்களிடமும் கலந்துரையாடி வருகிறோம். நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் கரோனா குறித்த பாடங்களை அறிமுகப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.