நாடு முழுவதும் செப்டம்பர் 13 ஆம் தேதி அகில இந்தியத் மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் கலந்துகொள்வதற்காக தேர்வு மையங்களுக்கு செல்ல ஏதுவாக மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 12ஆம் தேதியன்று, மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் விதமாக ஊரடங்கு திரும்ப பெற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு: மேற்குவங்கத்தில் ஊரடங்கை ரத்து செய்த மம்தா!
கொல்கத்தா: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எழுதும் மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் 12ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு திரும்ப பெறப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு: மேற்குவங்கத்தில் ஊரடங்கு ரத்து செய்த மம்தா!
செப்டம்பர் 12 ஆம் தேதி ஊரடங்கை திரும்பப்பெறுமாறு மாணவர் சமூகத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு பல கோரிக்கைகள் வந்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதுதெடார்பாக ட்விட் செய்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி "மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில்கொண்டு, செப்டம்பர் 12 ஆம் தேதி ஊரடங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, இதனால் மாணவர்கள் 13 ஆம் தேதி தேர்வில் எந்தவித அச்சமும் கவலையும் இல்லாமல் கலந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.