மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தாக்கி ட்வீட் செய்துள்ளார். புர்ட்வான் மாவட்டத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது அவர்களின் விருப்பம்.
அவ்வாறு திரும்புபவர்களை கோவிட்-19 தொற்று பரப்புவர்கள் என்று முத்திரை குத்துவது பொருத்தமற்ற, வருத்தமளிக்கக் கூடிய செயல். ஊர் திரும்பியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மேற்குவங்கத்தின் சொத்து. அரசு காட்டியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். இருந்தபோதிலும், மனிதாபிமானத்துடன் செயல்படுங்கள் மம்தா.