தெலுங்கு ஊடக உலகின் முன்னோடியான ஈநாடு பத்திரிகை, ஈடிவி தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை நிறுவியவர் ராமோஜி ராவ். இவர், ஊடகத்துறையில் மட்டுமல்லாது திரை உலகிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இவரது பெயரில் இயங்கிவரும் ராமோஜி ஃபிலிம் சிட்டி என்னும் திரைப்பட படப்பிடிப்புத் தளம் உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு ஸ்டூடியோ என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
ஊடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ராமோஜி ராவைச் சந்திக்க ஜோயல் ரீஃப்மேன், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள ஈடிவி பாரத் அலுவலகத்திற்குச் சென்றார். ராமோஜி ராவின் வெற்றி ரகசியத்தை தெரிந்து கொள்ள ஜோயல் ஆர்வத்துடன் இருந்தார். ஈடிவி பாரத் குழுவின் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஜோயல், ராவை சந்தித்ததில் வியப்படைந்தார்.