தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சுக்கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டதா? - சிபிசிஐடி விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கொண்ட தண்ணீர் வழங்கப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டார்.

poorva gark
poorva gark

By

Published : Jan 8, 2021, 10:49 PM IST

புதுச்சேரி ஆட்சியராக இருந்த அருண் என்பவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விடுமுறையில் சென்றதால் அவருக்குப் பதிலாக பூர்வா கார்க் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பெண் ஆட்சியரான இவருக்கு நச்சுத்தன்மை உடைய தண்ணீர் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவரது அலுவலகச் சிறப்பு அலுவலர் சுரேஷ்ராஜ் என்பவர் புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "ஜனவரி 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பூர்வா கார்க்கிற்கு பாட்டில் குடிதண்ணீர் வழங்கப்பட்டது.

அந்தத் தண்ணீரில் நச்சுத்தன்மை கொண்ட திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஆட்சியருக்கு வழங்கபட்ட குடிநீர் சம்பந்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்ற புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டார். தற்போது, இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க:தொடரும் பாலின தீண்டாமை: திருநர் சமூகத்தை ஒதுக்கும் என்.சி.சி.யின் விதி!

ABOUT THE AUTHOR

...view details