மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
ஆந்திராவில் நள்ளிரவு வரை நடந்த வாக்குப்பதிவு! - Lok sabha election
அமராவதி: ஆந்திராவில் வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்ததால், வாக்களர்கள் நள்ளிரவு வரை வாக்களித்தனர்.

Voting continues till midnight in Andhra Pradesh
இதில் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் கடப்பா, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் தெலுங்கு தேச கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சில வாக்குச்சாவடிகளில் பதற்றம் நீடித்ததால், நேற்று மாலை தான் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் குவிந்துள்ளனர். இதனையடுத்து, ஆந்திராவின் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்காளர்கள் வாக்களித்தனர்.