ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். முதலில், நகரின் முக்கிய தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரியாவுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சி கலந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரியாவுடன் இந்தியா துணை நிற்கும். உயிரிழந்தோருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.