விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான vhp.org ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது “பராமரிப்பில் உள்ளது” எனக் காட்டுகிறது. முன்னதாக வலைதளத்தின் பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து இருந்துள்ளது. அதனையடுத்து வலைதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் வலைதளம்!
டெல்லி: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் வலைத்தளம்!
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், இது தேச விரோதிகளின் செயல். விசாரணை முடியும்வரை யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது” என்றார். மேலும், இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காவல் துறை சரியாக விசாரணை நடத்தவில்லையென்றால் உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க...அரசு பங்களாவை காலி செய்வாரா பிரியங்கா காந்தி?