மாநிலங்களவை உறுப்பினராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை பொறுப்பேற்க உள்ளார். இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், காந்தி, அம்பேத்கர்,அண்ணா, முரசொலி மாறன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு நேற்று முன்தினம் மரியாதை செலுத்தினார்.
பாஜக மூத்தத் தலைவர் அத்வானியுடன் வைகோ சந்திப்பு!
டெல்லி: பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
அத்வானி
இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருடன் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பல மூத்தத் தலைவர்கள் தற்போது அவையில் இல்லை. பலர் உயிருடனே இல்லை. இதனை சமீபத்திய பேட்டிகளில் வருத்தத்துடன் குறிப்பிட்டு வந்த அவர், தனக்கு நெருக்கமான பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்வானியை சந்தித்து பேசியுள்ளார்.