தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு: சாதியத்தின் பிடியில் உத்தரப் பிரதேசம்

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தூங்கிக் கொண்டியிருந்த தலித் சிறுமிகள் மூவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலித் சிறுமிகள்
தலித் சிறுமிகள்

By

Published : Oct 13, 2020, 1:09 PM IST

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறைகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் கொண்டா நகரில் தூங்கிக் கொண்டிருந்த தலித் சகோதரிகள் மூவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வயது 8 முதல் 17 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில், இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுவரை, எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கோரியில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். கோமாவுக்குச் சென்ற அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details