தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஃபர்ஸ்ட் டான்ஸ் ஆடு... எப்ஐஆர் போடலாம்' ஆய்வாளரின் கண்டிஷனால் அதிர்ந்த சிறுமி!

லக்னோ: காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த சிறுமியிடம், எப்ஐஆர் பதிவு செய்ய முதலில் நடனமாட வேண்டும் என ஆய்வாளர் கண்டிஷன் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்
போலீஸ்

By

Published : Aug 17, 2020, 3:16 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் தபேலி பகுதியில் கோவிந்த நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.சிறுமியின் குடும்பத்தினர் கோயில்களில் பஜனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ், அவர்களை காலி செய்ய வற்புறுத்தியது மட்டுமின்றி அவ்வப்போது வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்து வந்ததாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி, ஒரு படி மேல் சென்று சிறுமி மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சமயத்தில், அனுப் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி நேராக கோவிந்த நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார்.

சிறுமியின் புகார் மனுவை விசாரித்த காவல் ஆய்வாளர் அனுராப் மிஷ்ரா, எப்ஐஆர் பதிவு செய்வதற்கு தன் முன்னால் நடனமாட வேண்டும் என்ற கண்டிஷனை முன்வைத்துள்ளார். சிறுமியும் வேறுவழியின்றி ஆய்வாளர் முன்பு நடனமாடியதாக கூறப்படுகிறது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோவிந்த காவல் நிலையம் வட்ட ஆய்வாளர் விகாஸ் குமார் பாண்டே கூறுகையில், " சிறுமியின் குடும்பத்தினருக்கும் வீட்டு உரிமையாளருக்கு இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. அந்தச் குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை. இதனால், காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கவே வீடியோவை படம்பிடித்து வைரலாக்கியுள்ளனர். இருப்பினும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளரே நடனமாட சொல்லியிருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details