உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் (89) உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டு, வென்ட்டிலேட்டரில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.