ஷாஜகண்பூர் (உத்தரப் பிரதேசம்): கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற திருமண நிகழ்வில், ஒரு தம்பதியினர் இந்திய அரசியலமைப்பின் நகலைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், சட்ட மாமேதை பி.ஆர். அம்பேத்கரின் உருவப்படத்தை திருமணம் நடைபெறும் இடத்தில் முன்னிலைப்படுத்தி வைத்திருந்தனர்.
உபியில் நிகழ்ந்த தனித்துவமான திருமணம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தனித்துவமான திருமணம் நடைபெற்றது. அங்கு புதுமணத் தம்பதிகள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை வாழப் போவதாக உறுதிமொழி ஏற்றனர். ஆடம்பரமான செலவுகள் இல்லாமல் எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது.
மணமகன் ராம்பாபுவுக்கும், மணமகள் சரிதாவுக்கும் எளிமையான முறையில், சில உறவினர்களும் மட்டும் பங்கேற்க இத்திருமண நிகழ்வு நடந்தேறியது. ராம் பாபுவும், சரிதாவும் திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்ததையடுத்து, தனது தந்தையின் அறிவுரையின் படி ராம் சட்டத் திட்டங்களை வகுத்த அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை முன்னிலையில் வைத்து, தனது திருமணத்தை நடத்தினார்.
இந்தத் திருமண நிகழ்வில் பங்கேற்ற உறவினர்களும், அண்டை வீட்டாரும் மணமக்களை பாராட்டியும் வாழ்த்தியும் சென்றனர்.