தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

டெல்லி: வங்கிகள் இணைப்பின் மூலம் நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகள் 12ஆக குறைக்கப்பட்டது. இது குறித்த சிறப்பு தொகுப்பைக் காணலாம்.

நிர்மலா சீதாராமன்

By

Published : Aug 30, 2019, 8:16 PM IST

வங்கிகள் இணைப்பு என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வங்கி இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன் படி, ரூ. 4 லட்சத்து 29 ஆயிரத்து 972 கோடி மதிப்புள்ள இந்தியன் வங்கி, ரூ. 3 லட்சத்து 77 ஆயிரத்து 887 கோடி மதிப்புள்ள அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மதிப்பு ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 859 கோடியாக உயர்ந்துள்ளது. இணைப்புக்குப் பிறகு வங்கியின் மொத்த இருப்புத் தொகை ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 411 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வங்கியில் ஊழியர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 814ஆக உயர்ந்துள்ளது.

27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, இனி 12 பொதுத்துறை வங்கிகளாக செயல்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இணைந்ததன் மூலம் இந்த வங்கியின் மதிப்பு ரூ.14 லட்சத்து 59 ஆயிரத்து 434 கோடியாக உயர்ந்துள்ளது. இணைப்புக்குப் பிறகு இந்த வங்கியின் மொத்த இருப்புத் தொகை ரூ. 8 லட்சத்து 20 ஆயிரத்து 304 கோடியாகவும், ஊழியர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 384 ஆகவும் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 9 ஆயிரத்து 609 கிளைகள் உள்ளன.

வங்கி இணைப்பின் விவரங்கள்

கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைந்ததன் மூலம் வங்கியின் மதிப்பு, தற்போது ரூ.15,20,295 லட்சம் கோடியாக உள்ளது. இணைப்புக்குப் பிறகு இந்த வங்கியின் மொத்த இருப்புத் தொகை ரூ. 8 லட்சத்து 58 ஆயிரத்து 930 லட்சம் கோடியாகவும், இணைப்புக்குப் பிறகு நாடு முழுவதும் இந்த வங்கிக்கு 10 ஆயிரத்து 342 கிளைகளும் உள்ளன. இணைப்புக்குப் பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை இந்த வங்கிக்கு 89 ஆயிரத்து 885 ஆக உள்ளது.

வங்கி இணைப்பின் விவரங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை இணைத்தப் பிறகு, இந்த வங்கியின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சத்து 94 ஆயிரத்து 526 கோடியாகவும், இணைப்புக்குப் பிறகு வங்கியின் மொத்த இருப்புத் தொகை ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 659 கோடியாகவும் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 11,437 கிளைகள் உள்ளன. இணைப்புக்குப் பிறகு இந்த வங்கியின் ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 649ஆக உள்ளது.

வங்கி இணைப்பின் விவரங்கள்

வங்கி இணைப்பின் விளைவுகள்:

*கடன் வழங்கும் திறன் வங்கி இணைப்புக்குப் பிறகு 2 விழுக்காடு அதிகரிக்கும்.

* இதன் மூலம் வங்கி மோசடி சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் முழு விவரங்கள்

* சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது அதிகரிக்கும்.

* இணைக்கப்பட்ட வங்கிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளதால், கடன் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

வங்கி இணைப்பின் விவரங்கள்

*அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்க இந்த வங்கி இணைப்பு வழிவகுக்கும்.

* உலக அளவில் இந்திய வங்கிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த வங்கிகளின் இணைப்பால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details