தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கணக்கில் காட்டப்படாத 80 லட்சம் சிக்கியது

மிசோரத்தில் கணக்கில் காட்டப்படாத 80 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.

Unaccounted Indian currency recovered in Mizoram
Unaccounted Indian currency recovered in Mizoram

By

Published : Feb 2, 2021, 5:27 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் ரைபிள் செர்ச்சிப் பட்டாலியன் பிரிவினர் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று (பிப்.1), கணக்கில் காட்டப்படாத 80 லட்ச ரூபாய் மிசோரம் அருகே உள்ள சம்பாய் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்டவர் யார், பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இந்தக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் அவர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போது வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அஸ்ஸாம் ரைபிள் பட்டாலியன் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, லால்ஹனீமா என்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details