மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண மோசடி வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறையின் அறிவுறுத்தலை அடுத்து என்சிபி போதைப் பொருள் தொடர்பாக வழக்குப் பதிந்து பாலிவுட்டில் பல முக்கிய பிரமுகர்கள், நடிகர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலர் தங்கள் கலந்துகொண்ட விருந்துகளில் போதைப் பொருள்களை உபயோகித்ததாக வந்த தகவலை அடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவான என்சிபி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் பிரமுகர்கள் பலரை விசாரித்தும் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஷ்ரதா கபூர், சாரா அலி கான், தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்சிபி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது.