டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டு மக்கள் மீதும், பொருளாதாரத்தின் மீதும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை பரவவிடாமல் தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்துபவரே உண்மையான தலைவர்.
உண்மையான தலைவர் யார்? - ராகுல் காந்தி விளக்கம்!
டெல்லி: கொரோனா தொற்றை பரவவிடாமல் தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்துபவரே உண்மையான தலைவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Raga
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் அச்சுறுத்தலை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. சரியான நேரத்தில் நடவடிக்கை தேவை" என பதிவிட்டுள்ளார். முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை முறையாக பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடுதிரும்பினர்.
இதையும் படிங்க: ‘பெண்கள் தினத்தன்று எனது ட்விட்டர் கணக்கு பெண்களுக்குதான்’ - மோடி