தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி பாஜகவில் இணைந்தார்

டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி (டிஆர்எஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஜீதேந்தர் ரெட்டி பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பி.ஜீதேந்தர் ரெட்டி

By

Published : Mar 28, 2019, 10:27 AM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த போது கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் எனது பெயர் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

பட்டியல் தயாரிப்பில் பிழை இருக்கலாம் என்றும், திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை வெளியிடும் என ஒருவார காலம் காத்திருந்தேன். ஆனால் எவ்வித அறிவிப்பும் வரவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சியில் உள்ளவர்கள் என்னை குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதையெல்லாம் பொருத்துக் கொண்டு, கட்சி வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டேன். ஆனால் கட்சி தலைமை எனக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றி விட்டது.

இதனால் அந்த கட்சியிலிருந்து தற்போது விலகி விட்டேன். மேலும் மோடி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதால், பாஜகவில் இணைத்துக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். பி.ஜீதேந்தர் ரெட்டி கடந்த 1989 முதல் 2006 வரை பாஜகவில் உறுப்பினராக இருந்தார். அதன்பின்பு கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details