தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

30,000 ரூபாயை கபளீகரம் செய்த ட்ரைவருக்கு முதலாளி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்

மும்பை: முதலாளியிடம் வேலைக்காக பெற்ற 30,000 ரூபாயை குடித்துவிட்டு ஊதாரித்தனமாக செலவிட்ட வாகன ஓட்டுநர் கட்டிவைத்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

viral

By

Published : Jul 29, 2019, 5:28 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் அகில் போகன்கர் என்பவர் லாரி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். அங்கு லாரி ஓட்டுநராக விக்கி என்ற நபர் பணிபுரிந்துவந்தார். இவரிடம் இரு வாரங்களுக்கு முன்பு உரிமையாளர் அகில் 30,000 ரூபாய் கொடுத்து சரக்குகளை வாங்கி பரிவர்த்தனை செய்யுமாறு அனுப்பியுள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டவுடன் விக்கி இடத்தை காலி செய்துவிட்டு இரு வாரங்கள் தலைமறைவானார். 30,000 ரூபாயைக் குடியும், கும்மாளமுமாகச் செலவுசெய்துவிட்டு பணம் காலியானவுடன் அவர் திரும்பியுள்ளார்.

திரும்பிவந்தவரிடம் விவரத்தை விசாரித்ததும் ஆத்திரம் அடைந்த உரிமையாளர் ஓட்டுநர் விக்கியை தனது ஊழியர்களைக் கொண்டு உத்திரத்தில் தொங்கவிட்டு அடித்துள்ளார்.

இனி இதுபோல தப்பு செய்வாயா எனக்கேட்டு பெல்டால் அகில் போகன்கர் விக்கியை அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஓட்டுநர் அடிவாங்கும் வீடியோ

இந்நிலையில், ஓட்டுநர் விக்கியை வன்முறையான முறையில் அடித்து உதைத்த உரிமையாளர் அகிலைக் கைது செய்து மும்பை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details