ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் ரூட் என்பவர், சிகர்பூர் சதுக்கத்திற்கு அருகே ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முயற்சியில் தானே களமிறங்கினார். அங்கு கொட்டிக்கிடக்கும் மணலால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு, துடைப்பத்தை உபயோகித்து சாலையை தூய்மைபடுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் காவலரின் செயலை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
விபத்தை தவிர்ப்பதற்காக தூய்மைப் பணியாளராக மாறிய போக்குவரத்து காவலர் ... ஒடிசாவில் நெகிழ்ச்சி!
புவனேஸ்வர்: விபத்தை தவிர்ப்பதற்காக சாலையில் கொட்டிக்கிடக்கும் மணலை போக்குவரத்து காவலர் ஒருவர் அப்புறப்படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ea
முன்னதாக, ரூட் சிகர்பூரில் போக்குவரத்து பணியில் இருந்த சமயத்தில், லாரியில் மாட்டிக்கொள்ள இருந்த 4 இளைஞர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார். இதற்காக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Oct 19, 2020, 7:19 AM IST