தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2019, 8:59 AM IST

ETV Bharat / bharat

டிராக்டர் - டேங்கர் லாரி மோதல்: 8 பேர் பலி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் டிராக்டரும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

டிராக்டர் - டேங்கர் லாரி மோதல்

உத்தரப் பிரதேசம் மாநிலம், சித்தாபூர் மாவட்டம், டெவ்டா சிலவுலாபகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சில் கலந்துகொள்ள 40 பேர் டிராக்டர் ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது அதே வழியாக எதிர் திசையில் வந்த டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஏழுபேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தாபூர் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details