நாடாளுமன்றத்தில் இன்று பேசிய திமுகவின் முக்கியத் தலைவரும் ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு, "உலகில் எங்குச் சென்றாலும் பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரையும் கணியன்பூங்குன்றனாரையும் தமிழையும் பெருமைப்படுத்தும் விதமாகப் பேசுகிறார். மோடியின் இந்தச் செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்" என்றார்.
'நரேந்திர மோடி தமிழைப் பெருமைப்படுத்துகிறார்... ஆனால் தமிழ்நாடு பாஜக?'
டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தமிழைப் பெருமைப்படுத்தும் விதமாக இருந்தாலும் தமிழ் நாடு பாஜகவினரின் செயல் அதற்கெதிராக உள்ளதாக டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
TR Balu
மேலும், "பிரதமர் மோடியின் செயல்பாடுகள் இப்படி இருக்க, தமிழ்நாட்டில் பாஜகவினரோ திருவள்ளுவரையும் திருக்குறளையும் காவிமயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தமிழ்நாடு பாஜகவினரை மக்களவையில் தாக்கிப்பேசினார், டி.ஆர். பாலு.
இதையும் படிங்க:சபரிமலைக் கோயிலுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!