மத்திய அரசின் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளை அடுத்து, கோவா மாநிலத்தில் மூடப்பட்டிருந்த மாநில எல்லைகள் திறக்கப்பட்டன. அதனால் அங்குள்ள கடற்கரைகள், கேசினோ மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்தி வந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என கோவா அரசு அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பனாஜி மேயர் மட்கைகர், “ பனாஜிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், முகக்கவசம் அணியாததோடு, அதனை அணிய அறிவுறுத்தும் அரசு பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.