இது தொடர்பாக தனது கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை ஜோஷி எழுதியுள்ளார். அதில், பாஜகவின் பொதுச் செயலாளர் ராம்லால் தன்னை தேர்தலில் போட்டியிடக்கூடாது என கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஜோஷியிடம் தகவலைக் கூறிய ராம்லால், தாமாக தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு முரளி மனோகர் ஜோஷி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதில் அவருக்கு வருத்தம் உள்ளதாகவும், இதனை கட்சி தலைவர் அமித்ஷா தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'போட்டியிட வேண்டாம் என்றனர்' - பாஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி
டெல்லி: பாஜக தன்னை போட்டியிட வேண்டாம் என்று கூறியதாக அக்கட்சி மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
95 வயதாகும் முரளி மனோகர் ஜோஷி, 2014 இல் தனது வாராணாசி தொகுதியை பிரதமர் மோடிக்கு விட்டுக்கொடுத்து விட்டு உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன் சக அரசியல்வாதிகளைவிட சுறுசுறுப்பானவராக அறியப்பட்ட முரளி மனோகர் ஜோஷி, முந்தைய காங்கிரஸ் அரசின் பாதுகாப்பு செலவினங்கள் மற்றும் வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்தார். கல்ராஜ் மிஸ்ரா, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஷாந்த குமார், கரிய முன்டா ஆகிய மூத்த தலைவர்களுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாப்பளிக்கப்படவில்லை. இவர்களிடம் தகவலைக் கூறிய ராம்லால், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, கல்ராஜ் மிஸ்ரா, ஷாந்த குமார், கரிய முன்டாஆகியோர் அறிவித்தனர். ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் துணை பிரதமராக இருந்த அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் பாஜக தொடங்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் உள்ளனர். கடந்த ஐந்து முறை அத்வானி போட்டியிட்டு வெற்றி குஜராத்தின் காந்திநகர் தொகுதியில், இந்த முறை அமித்ஷா போட்டியிடுகிறார். 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு பதவி வழங்குவதில்லை என அக்கட்சி நிலைப்பாட்டையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.