தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேகதாது விவகாரத்தை இனிவரும் காலங்களில் விவாதிக்கக் கூடாது - தமிழ்நாடு அரசு

டெல்லி: மேகதாது விவகாரத்தை இனிவரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு காவிரி மேலண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டத்தில் வலியுறத்தியுள்ளது.

காவிரி

By

Published : May 28, 2019, 12:17 PM IST

காவிரி நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் மத்திய அரசு அமைத்தது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கான் பிரதிநிதியை இரு அமைப்புகளிலும் நியமித்தன.

பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதியும், ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கடைசியாக மே 23ஆம் தேதியும் நடைபெற்றன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசைன் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் நான்கு மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், இனிவரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்குரிய 9.2 டி.எம்.சி. நீரையும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நீரை விடுவிக்க ஆணையிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details